தொண்டி, சுற்றுவட்டார அரசு பள்ளிகளில் மனித உரிமைகள் நாளையொட்டி மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

தொண்டி, டிச். 11: தொண்டி மற்றும் சுற்றுவட்டார அரசு பள்ளிகளில் மனித உரிமைகள் நாளையொட்டி ஆசிரியர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 10ந் தேதி மனித உரிமைகள் நாளாக கொண்டாடப்படுவதால் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உறுதிமொழி எடுக்கப்பட வேண்டும் என மனித உரிமைகள் ஆனையம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து தொண்டி கிழக்கு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் லியோ ஜெரால்டு எமர்சன் தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த உறுதிமொழியில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் வாயிலாகவும், இந்தியாவில் பின்பற்றப்பட்டு செயல்படுத்தப்படுகிற பல்வேறு பன்னாட்டு உடன்படிக்கைகளின் வாயிலாகவும் பாதுகாக்கப்படுகின்ற அனைத்து மனித  உரிமைகளின்பால் உண்மையான மற்றும் மாறாத பற்றுறுதி மிக்கவராக இருப்பேன். அந்த உரிமைகளை பாதுகாக்க என்னுடைய அலுவலர்கள அனைத்தையும் நிறைவேற்றுவேன். எவ்வித வேறுபாடுமின்றி மனித உரிமைகளையும், அனைவரின் சுயமரியாதைகளையும் மதித்து நடப்பேன். என்னுடைய சொல், செயல் அல்லது எண்ணங்கள் வாயிலாக பிறருடைய மனித உரிமைகளை மீற மாட்டேன். மனித உரிமைகள் மேம்பாட்டிற்க்காக நான் எப்போதும் கடமை பற்று உறுதி மிக்கவராக இருக்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Human Rights Day ,government schools ,
× RELATED மாணவர்களுடன் பிரதமர் உரையாடல் அரசு...