×

மாநில அளவில் நடைபெறும் பீச் வாலிபால் போட்டிக்கு சித்தார்கோட்டை பள்ளி தேர்வு

சாயல்குடி, டிச. 11:  மாநில அளவிலான பீச் வாலிபால் போட்டி மண்டபம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் சித்தார்கோட்டை முகம்மதிய மேல்நிலைப்பள்ளி யு 14 அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்த அணி மாநில அளவிலான போட்டிக்கு தேர்வானது. போட்டிக்கு தேர்வான அணி மாணவர்களை ராமநாதபுரம் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, உடற்கல்வி இயக்குனர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர் அஜிஸ்கனி, பள்ளி நிர்வாகிகள், பெற்றோர்-ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள் பாராட்டினர்.

Tags : Siddharkotte School ,Tournament ,Beach Volleyball ,
× RELATED தூத்துக்குடி மாவட்ட குத்துசண்டை போட்டி