×

கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் மனு தாக்கல் மந்தம்

கமுதி, டிச. 11: ராமநாதபுரம் மாவட்டம், கமுதி ஊராட்சி ஒன்றியத்தில் மனு தாக்கல் மந்தமாக நடைபெற்ற வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கு கடந்த 9-ம் தேதி முதல் ஊராட்சி தலைவர், வார்டு, ஒன்றிய, மாவட்ட கவுன்சிலர் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கமுதி ஊராட்சி ஒன்றியத்தில், திங்கள்கிழமை எருமைகுளம் ஊராட்சி தலைவர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த பெரியசாமி என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார். நேற்று செவ்வாய்கிழமை எழுவனூர், மண்டல மாணிக்கம், வலையபூக்குளம், அச்சங்குளம் ஆகிய 4 ஊராட்சியில் உள்ள மொத்தம் 30 வார்டுகளுக்கும் இதுவரை 5 நபர்கள் மட்டும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Tags :
× RELATED கிராம மக்கள் கலெக்டரிடம் மனு