தடகள போட்டியில் மதுரை அரசு விளையாட்டு விடுதி வீரர்கள் சாதனை

மதுரை, டிச. 11: தடகள போட்டியில் மதுரை அரசு விளையாட்டு விடுதி வீரர்கள் சாதனை படைத்தனர். மாநில அளவிலான குடியரசு தினவிழா தடகள போட்டி திருச்சியில் நடந்தது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மதுரை விளையாட்டு விடுதி சார்பில் மாணவர்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர். இதில் பலரும் பதக்கங்களை பெற்றனர். குறிப்பாக 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மாதேஷ் 1:55.29 விநாடிகளில் கடந்து புதிய சாதனை  படைத்தார். மேலும் இவர் ஆண்கள் முதியோர் பிரிவில் இந்திய தடகள சம்மேளனம் நடத்தும் பயிற்சி முகாமிற்கு தேர்வு பெற்று பயிற்சியில் உள்ளார்.

மேலும் வீரர் ஜெயராகுல், 400மீ., தடை தாண்டும் போட்டியில் தங்கம் வென்றார். வீரர் வசந்த், 3000மீ., ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் வென்றார். சாதனை படைத்த மாணவர்களுக்கு  மதுரை விளையாட்டு விடுதியில் பாராட்டு விழா நடந்தது. விடுதி மேலாளர் ராஜா, மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலர் லெனின், அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் சாம், ஜஸ்டின், தடகள பயிற்சியாளர் கண்ணன் உள்பட பலரும் வாழ்த்தினர்.

Tags : Madurai Government Athletics Athletes Competition ,
× RELATED சாலைப்பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு டூவீலரில் சென்ற திமுக எம்.எல்.ஏ