மதுரை அரசு மருத்துவமனைகளில் செவிலிய உதவியாளர்கள் இல்லாததால் உள் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம்

மதுரை, டிச. 11: மதுரை அரசு மருத்துவமனைகளில் செவிலிய உதவியாளர்கள் இல்லாததால் நோயாளிகள் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகரித்து வருவதாக புகார் எழுந்துள்ளது. மதுரையில் அரசு ராஜாஜி மருத்துவமனை, விரிவாக்கம் செய்யப்பட்ட விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் பல்நோக்கு மருத்துவமனை என மூன்று மருத்துவமனைகள் உள்ளன. இந்த மூன்று மருத்துவமனைகளிலும் எம்.என்.ஏ., எப்.என்.ஏ., எனப்படும் ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள் இல்லாமல் நோயாளிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர். வார்டுகளில் உள்ள செவிலியர்களுக்கு உதவியாக, அவர்களின் ஆலோசனைப்படி பல்வேறு பணிகளை மேற்கொள்ளும் இந்த செவிலிய உதவியாளர்கள் இல்லாதது, சில நேரங்களில் நோயாளிகள் உயிரிழப்பிற்கு காரணமாக அமைந்துவிடுவதாக புகார் எழுந்துள்ளது.   உடல்நலம் பாதிக்கப்பட்டு, உள்நோயாளிகளாக சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு அந்தந்த வார்டுகளில் இருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பர். அந்த நோயாளியை தொடர்ந்து கண்காணிப்பது. நேரத்திற்கு மருந்து மாத்திரைகள் கொடுப்பது. நோயாளி ஆபத்தான நிலைக்கு செல்லும்போது, டாக்டரின் ஆலோசனைப்படி உரிய சிகிச்சைக்கு நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட முக்கிய பணிகளை செவிலியர் (ஸ்டாஃப் நர்ஸ்) மேற்கொள்வார். இந்த பணிகளை செய்வதற்கு, செவிலியரால் மட்டும் முடியாது என்பதற்காக, ஒவ்ெவாரு வார்டிலும், செவிலியர்களுக்கு உதவியாக, ஆண், பெண் செவிலிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, இவர்கள், செவிலியரின் அறிவுரைப்படி, நோயாளிகளை கவனித்து வருவர். இவர்கள் செவிலிய உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

செவிலியரின் அறிவுரைப்படி, நோயாளிகளுக்கு ‘ட்ரிப்’ போடுவது, அதை சரிசெய்வது, புண்ணுக்கு மருந்து கட்டுதல், பெட்ஷீட் மாற்றுதல், பெட் சரி செய்தல், நோயாளிகளுக்கு தேவையான அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்குதல் மற்றும் செவிலியருக்கு உதவியாக அனைத்து பணிகளையும் மேற்ெகாள்வது, இந்த செவிலிய உதவியாளர்களின் பணிகளாகும். இந்நிலையில் தற்போது செவிலிய உதவியாளர்கள் இல்லாததால், நோயாளிகளுக்கான தங்கள் பணியை முழுமையாக செய்ய முடியவில்லை என்றும், இதனால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் செவிலியர்களே பகிரங்கமாக குற்றம் சாட்டுகின்றனர். இது அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறும்போது, ``அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் விபத்து பிரிவு விரிவாக்க மருத்துவமனை இவை இரண்டிலும் குறைந்தது 340 செவிலிய உதவியாளர்கள் இருக்க வேண்டும் என விதி உள்ளது.

ஆனால் 100 ேபர் கூட இல்லை, சமீபத்தில் திறக்கப்பட்ட பல்நோக்கு மருத்துவமனைக்கு, செவிலிய உதவியாளர்கள் 100 பேரை நியமித்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டு, அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இன்றுவரை நியமனம் செய்யப்படவில்லை, ராஜாஜி மருத்துவமனை, விபத்து சிகிச்ைச பிரிவு மற்றும் பல்ேநாக்கு மருத்துவமனை இந்த 3 மருத்துவமனைகளிலும் இந்திய மருத்துவ கவுன்சில் விதிமுறைப்படி குறைந்தது 450 செவிலிய உதவியாளர்கள் இருக்க வேண்டும், அப்போதுதான் நோயாளிகளுக்கான மருத்துவ சேவை கிடைக்கும். ஆனால் இதில் கால்வாசிப் பேர் கூட இல்லை. இந்நிலையில் நோயாளிகளை செவிலியர்களால் கவனிக்க முடிவதில்லை. இதனால் நோயாளிகளில் தேவையை எங்களால் நிறைவேற்ற முடியவில்லை. சில நேரங்களில், நோயாளிகளில் உயிரிழப்பிற்கு, செவிலிய உதவியாளர்களின் சேவை கிடைக்காததும் ஒரு காரணமாக அமைந்து விடுகிறது. எனவே உடனடியாக அரசு மருத்துவமனைகளுக்கு தேவையான செவிலிய உதவியாளர்களை நியமிக்க வேண்டும்’’ என்றார்.

Tags : death ,nurse assistants ,Madurai Government Hospitals ,
× RELATED காப்பீட்டுத் திட்டம் மூலம் சிகிச்சை...