×

நெற்பயிரில் குலை நோய் தாக்குதலா? தப்பிக்க அறிவுரை

பழநி, டிச. 11: நெற்பயிரில் ஏற்படும் குலை நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க வேளாண்துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர். பழநி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த மழையின் காரணமாகவும், கிணற்று பாசனம் மூலமாகவும் சில பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. இப்பகுதிகளில் கோ 43, திருச்சி 1, ஏ.டி.பி 39 வகை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. இந்நெற்பயிரில் குலைநோய் தாக்குதல் மற்றும் பூச்சி தாக்குதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து தப்பிக்கும் வழிமுறை குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது,

நெற்பயிரின் இலைகளில் கண்வடிவ புள்ளிகள் தென்பட்டால் அது குலை நோய் தாக்குதலின் அறிகுறி ஆகும். பூஞ்சான கொல்லிகளுடன் ஒரு ஏக்கருக்கு 60 லிட்டர் தண்ணீருடன் 120 கிராம் டெவிஸ்டின் கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். தழைச்சத்தை பிரித்து குறைத்து இட வேண்டும். நோய்தாக்குதல் அறிகுறி தென்பட்டால் தழைச்சத்து இடுவதை நிறுத்த வேண்டும். வயலின் வரப்பு ஓரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தாக்குதல் அறிகுறி இருந்தால் கைத்தெளிப்பான் மூலம் மாலை நேரத்தில் கார்பன்டைசிம் 250 கிராம் அல்லது ஐசோ - புராப்பைல் பாஸ்ப்போரியோதினேட் (கிட்டாசின்) 500 மில்லி அல்லது எடிப்பன்பாஸ் 500 மில்லி கலந்து ஒரு ஏக்கருக்கு தெளிக்க வேண்டும். திருந்திய நைல் சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் நிலத்தில் இந்நோய்களின் தாக்குதல் குறைவாக இருக்கும். இவ்வாறு கூறினர்.

Tags :
× RELATED நீடாமங்கலம் அருகே புதிய நெல் ரக செயல் விளக்க திடல் அமைப்பு