×

பட்டிவீரன்பட்டி சிவன் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது திரளான பக்தர்கள் தரிசனம்

பட்டிவீரன்பட்டி, டிச. 11: பட்டிவீரன்பட்டி சோதிகாம்பிகை உடனுறை சோதிலிங்கேஸ்வரர் கோயிலில் திருக்கார்த்தியையொட்டி கார்த்திகை தீபம் ஏற்றும் திருவிழா நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. முன்னதாக அர்த்தநாரீஸ்வரர் உற்சவம் நடைபெற்றது. தொடர்ந்து சிவன் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த மகா தீப காட்சியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தொடர்ந்து சோதிலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர் சோதிலிங்கேஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவரான சந்திரசேகரசாமியின் நகர்வலம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினரும், ஊர் மக்களும் இணைந்து செய்திருந்தனர். சித்தரேவிலில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் முன்னிட்டு கடைவீதியில் சொக்கப்பனை என்னும் தீபம் ஏற்றப்பட்டது.

Tags : Great Deepam ,Pathiveeranpatti Shiva Mountain ,devotees ,
× RELATED மாயார் பள்ளத்தாக்கில் கழுகுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது