நல்லொழுக்க பயிற்சி முகாம்

முத்துப்பேட்டை, டிச.11: முத்துப்பேட்டையில் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக மாவட்ட நல்லொழுக்க 2நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் முஹம்மது மிஸ்கீன் தலைமை வகித்தார். மாநில பேச்சாளர் கோவை ரஹ்மத்துல்லா, முகமதுஒலி ஆகியோர் பேசினர்.மாநில பொருளாளர் அப்துல் ரஹீம் நிர்வாகவியல் பற்றி பேசினார். மாநில துணைத்தலைவர் அப்துல் ரஹ்மான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்யவேண்டிய பணிகள் குறித்து பேசினார். மாவட்ட பேச்சாளர் சுஜாஅலி நல்லொழுக்கம் குறித்து பேசினார். இதில் கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பேச்சாளர்கள் உட்பட பலரும் கலந்துக்கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் அசாருதீன் நன்றி கூறினார்.

Tags : Virtue Training Camp ,
× RELATED மத்திய பல்கலைக்கழக குடியரசு...