முத்துப்பேட்டையில் சாலையில் ஓடிய கழிவுநீர் வெளியேற்றி சீரமைப்பு

முத்துப்பேட்டை. டிச.11: திருவாரூர்மாவட்டம், முத்துப்பேட்டை குட்டியார்பள்ளிவாசல் அருகே உள்ள ஜமாலியா தெருவில் அதிகளவில் மக்கள் வசித்து வருகின்றனர்அதனால் அதிகளவில் குடியிருப்புகள் மற்றும் காலனி வீடுகள் உள்ளது. இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் சுகாதார பணிகள் மேற்கொள்வதில் பல ஆண்டுகளாக பினதங்கிய நிலையில் உள்ளது. இந்நிலையில் குட்டியார்பள்ளிவாசல் அருகில் இருந்து செல்லம் சிமென்ட் சாலையானது ஜமாலியா தெருவை கடந்து காமராஜர்காலனி வழியாக செம்படவன்காடு வரை செல்கிறது. இந்த சாலை போடும்போதே போதிய தரமில்லாமல் போடப்பட்டதால் சாலை முழுவதும் சேதமாகி குண்டும் குழியுமாக காட்சியளிகிறது. இந்நிலையில் இப்பகுதியில் முறையாக வடிகால் வசதி இல்லாததால் கழிவுநீர்சாலையில் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. தற்ேபாது மழை பெய்து வருவதால் கழிவுநீருடன் மழைநீரும் இரண்டொரு கலந்து சாலையில் உள்ள பள்ளங்களில் தேங்கி கிடந்தது. அதிகளவில் கழிவுநீர்வரும் போது ஆறுகள் போன்று பெருக்கெடுத்து சென்றது. அதேபோல் நெடுெங்கும் குப்பைகளும் குவிந்து கிடந்தது. இதில் ஜமாலியா தெரு ஓரம் உள்ள அரசகுளம் கரையில் அதிகளவில் குப்பைகள் குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் அப்பகுதியை சேர்ந்த பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளரிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையுமில்லை. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஆகவே பேரூராட்சி செயல் அலுவலர்நேரடியாக பார்வையிட்டு அப்பகுதியில் தேங்கிகிடக்கும் கழிவுநீரை வெளியேற்றவும், அப்பகுதியில் குவிந்து கிடக்கும் குப்பைகளை அகற்றவும் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறித்து கடந்த 9ம் தேதி தினகரன் நாளிதழில் ப செய்தி வெளியானது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற செயல் அலுவலர்ஜெயராஜ் உடன் நடவடிக்கை எடுக்க உத்தவிட்டார். இதையடுத்து பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர் வீரமணி தலைமையில் பணியாளர்கள் சிமென்ட் சாலையில் தேங்கி கிடந்த கழிவுநீரை வெளியேற்றி சீரமைத்தனர். அதே போல் துப்புரவு பணியாளர்களை கொண்டு சாலையில் கிடந்த குப்பைகள் அகற்றப்பட்டது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றியை தெரிவித்தனர்.

Tags : sewage runoff ,Muthupettai road ,
× RELATED நல்லம்பள்ளி- லளிகம் வழியில் சாலையோர பள்ளங்களை சீரமைக்க வலியுறுத்தல்