×

நடவடிக்கை எடுக்க கோரிக்கை அனுமதியின்றி மது விற்றவர் கைது

முத்துப்பேட்டை, டிச.11: முத்துப்பேட்டை அடுத்த பேட்டை மீன் மார;க்கெட் அருகே அனுமதியில்லாமல் மதுபானம் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்ஐ ராஜேந்திரன் அப்பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டார். அப்போது அங்கு பேட்டை முனியப்பன் மகன் கேசவன் (45) என்பவர் மதுபானம் விற்பனை செய்யும் போது பிடிப்பட்டார்.. இதனையடுத்து வழக்கு பதிவு செய்து கேசவனை கைது செய்த போலீசார்அவரிடமிருந்து மதுபானம் பாட்டில்கள் பறிமுதல்செய்தனர். பின்னர் கேசவனை திருத்துறைப்பூண்டி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED காவல்துறை நடவடிக்கை எடுக்க...