×

வலங்கைமான் அருகே குழாய் உடைப்பால் வீணாகும் தண்ணீர்

வலங்கைமான்,டிச.11: வலங்கைமான் மேல பள்ளி வாசல் அருகே பாபநாசம்- குடவாசல் சாலையில் வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கழிவு நீர் குட்டைபோல் காட்சி அளிக்கிறது.
வேதாரன்யம் மற்றும் வழியோர கிராமங்கள் பயன் பெறும் விதமாக வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முன்னதாக இத்திட்டத்தில் வேதாரண்யம் பகுதிக்கு கும்பகோணம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றிலிருந்து பாபநாசம்- வலங்கைமான் மற்றும் வலங்கைமான் - மன்னார்குடி சாலைவழியாக சாலையின் மையப்பரப்பில் இயந்திரத்தின் உதவியோடு பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தி தண்ணீர் கொண்டு செல்லப்படுகின்றது. இந்த சாலையில் செல்லும் கனரக வாகனங்களால் இக்குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாவதும் அதை சரிசெய்வதும் தொடர்கதையாக உள்ளது.

இந்நிலையில் பாபநாசம்- குடவாசல் சாலையில் வலங்கைமான் மேல பள்ளிவாசல் அருகே வேதாரண்யம் கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கால்வாய்போல் ஓடி கழிவுநீர் குட்டை போல் காட்சி அளிக்கிறது. மேலும் சாலையும் பழுதாகியுள்ளதால் அப்பகுதியின் வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். குடிநீர் ஓடி அருகே உள்ள கைபம்பு பகுதியில் தேங்கி தொற்றுநோய் பரவும் வகையில் உள்ளது. எனவே குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சரிசெய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : pipe break ,Valangaiman ,
× RELATED கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம்...