×

வாக்காளர் பட்டியலில் குழறுபடி கண்டித்து தேர்தல் புறக்கணிப்பதாக கூறி மக்கள் ஆர்ப்பாட்டம்

திருத்துறைப்பூண்டி, டிச.11: திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிங்குராஜபுரம் பகுதியில் வார்டு வாக்காளர் பட்டியலில் குளறுபடி தேர்தல் புறக்கணிக்கப் போவாதாக அறிவிப்பு செய்து பஞ்சாயத்து அலுவலகம் முன்பு வாக்காளர்கள் ஆர்ப்பாட்டம். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே பாமணி ஊராட்சிக்கு உட்பட்ட தேசிங்கு ராஜபுரத்தில் 9வது வார்டுக்குட்பட்ட பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வார்டு பகுதியில் 500க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதிக்கு உட்பட்ட வாக்காளர் பெயர்கள் அடுத்த வார்டில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கணவனுக்கு 9வது வார்டிலும் மனைவிக்கு 10வது வார்டிலும் பெயர்கள் சேர்க்கப்பட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் சில வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளது. இவ்வாறு 250க்கும் மேற்பட்ட வாக்காளருக்கான வார்டு வரையறை பட்டியல் சரியில்லாத காரணத்தினால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக கூறி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags : Demonstration ,election ,
× RELATED அடிப்படை வசதி செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்