×

நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை பராமரிப்பு பணி டெமு ரயில் இன்று இயங்காது

திருவாரூர், டிச.11: திருவாரூரில் இருந்து காரைக்குடி செல்லும் டெமு ரயில் பராமரிப்பு பணி காரணமாக இன்று ஒரு நாள் மட்டும் இயங்காது என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது .திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை மற்றும் பட்டுக்கோட்டை வழியாக காரைக்குடிக்கு தினமும் காலை 6 மணி அளவில் டெமு ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இதேபோல் இந்த ரயில் மதியம் 12.30 மணி அளவில் காரைக்குடியை அடையும் நிலையில் அங்கிருந்து 2. 30 மணியளவில் புறப்பட்டு இரவு 9 மணி அளவில் திருவாரூர் வந்தடைகிறது. இந்நிலையில் இந்த ரயிலின் பராமரிப்பு பணி காரணமாக இன்று (11ம்தேதி) ஒரு நாள் மட்டும் ரயில் சேவை நிறுத்தப்படுவதாக தென்னக ரயில்வே செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED பாலம் கட்டுவதில் தாமதம் மழை...