வர்த்தகர்கள், பொதுமக்கள் வலியுறுத்தல்

திருவாரூர், டிச. 11: திருவாரூர் ராமகே ரோட்டில் தினந்தோறும் ஏற்பட்டுவரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாருக்கு பொதுமக்களும் ,வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவாரூர் நகரில் ராமகே ரோடு பகுதியில் 2 தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கிவருகின்றன. இந்த 2 பள்ளியிலும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இதுமட்டுமன்றி இந்த ரோடு வழியாக கொடிக்கால்பாளையம், கேக்கரை, பள்ளிவாரமங்கலம், பழையவலம், திருப்பள்ளி முக்கூடல், ஓடாச்சேரி உட்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மற்றும் பள்ளி கல்லூரி, மாணவ மாணவிகள் சென்று வருகின்றனர். . இதுமட்டுமின்றி பள்ளி வாகனங்கள், மற்றும் பெற்றோர்களின் இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள் என காலை 8.30 மணி முதல் 9 மணிக்குள் அரை மணி நேரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலையை கடப்பதால் இந்த நேரத்தில் பல மணி நேரம் வரையில் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதேபோன்று மாலை 4 .30 மணி முதல் 5 மணி வரையிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது .இதன் காரணமாக இந்த 2 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள், பெற்றோர்கள் மட்டுமின்றி இந்த சாலையை கடந்து செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பிற பள்ளி ,கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உட்பட அனைவரும் தங்களது பள்ளிகளுக்கு உரிய நேரத்திற்கும், பள்ளி முடிந்து மாலையில் வீடுகளுக்கும் உரிய நேரத்திற்கு செல்ல முடியவில்லை. எனவே பொதுமக்கள் பெற்றோர் மற்றும் மாணவ மாணவிகளின் நலன் கருதி இந்த சாலையில் பள்ளி நேரத்தின்போது காலையிலும், மாலையிலும் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டு போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Merchants ,
× RELATED கடலூரில் நகராட்சி அலுவலகத்தை...