கும்பகோணத்தில் நடைபாதையை மறித்து கட்டிய தடுப்பு கட்டையை அகற்ற வேண்டும் நகராட்சி ஆணையரிடம் மக்கள் மனு

கும்பகோணம், டிச. 11: கும்பகோணம் வண்ணாங்கன்னியில் நடைபாதை சந்தை மறித்து சிமென்டால் கட்டப்பட்ட கட்டைகளை அகற்ற வேண்டுமென நகராட்சி ஆணையரிடம் மக்கள் மனு அளித்தனர்.கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியான வண்ணாங்கன்னியில் உள்ள நகராட்சி சந்தில் 10க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். இக்குடும்பத்தினர் சென்று வருவதற்கு இந்த சந்தை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒருவர், சந்தின் முகப்பில் சிமென்டால் தடுப்பு கட்டைகளை கட்டியுள்ளார். இதுகுறித்து மக்கள் கேட்டதற்கு உரிய பதில் கூறவில்லை.

Advertising
Advertising

இந்த தடுப்பு கட்டையால் எங்கள் குடும்பத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், முதியவர்கள் என அதில் ஏறி நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையின்போது சந்தில் மழைநீர் தேங்கி வடியாத நிலை ஏற்பட்டது. எனவே தெரு சந்தை மறித்து கட்டியுள்ள சிமென்ட் கட்டையை உடனடியாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் அப்பகுதியினரை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: