ரசாயனம் இல்லாத இயற்கை காய்கறி சாகுபடி பயிற்சி

கும்பகோணம், டிச. 11: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் உணவு பாதுகாப்பு மகளிர் குழுவுக்கு ரசாயனம் இல்லா காய்கறி உற்பத்தி பயிற்சி முகாம் நடந்தது. அட்மா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி தலைமை வகித்தார். தோட்டக்கலை அலுவலர் (பொ) மகேஷ்வரன் பயிற்சி அளித்தார்.

அதில் வீட்டு உணவு தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், உபரியாக உள்ளதை அருகில் வசிப்பவர்களுக்கு கொடுப்பதற்கும், இக்குழுவினர் ரசாயனம் இல்லாமல் இயற்கையான முறையில் காய்கறிகளை உற்பத்தி செய்ய பயிற்சி அளித்தனர்.

இதையடுத்து கஞ்சனூர் பசுமை மகளிர் குழுவுக்கு சுழல் நிதியாக ரூ.10 ஆயிரத்தை, அட்மா திட்ட தலைவர் மனோகரன், மாவட்ட அட்மா திட்ட உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் வழங்கினர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

Related Stories:

>