×

குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு கடையநல்லூரில் சட்டநகலை எரித்த எஸ்டிபிஐ கட்சியினர் 91பேர் கைது

கடையநல்லூர்,டிச.11: குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடையநல்லூரில் சட்ட நகலை எரித்த எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் 91 பேரை போலீசார் கைது செய்தனர். குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ.கட்சி சார்பில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் நடந்தது. இதேபோல கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜாபர்அலி உஸ்மானி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் சீனாசேனா சர்தார், இம்ரான்அலி, மாவட்ட துணைத்தலைவர் ஷேக்சிந்தாமதார், பொருளாளர் முகம்மது நயினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஒலி, சித்திக், தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஹக்கீம், மாவட்ட செயலாளர் ராஜாமுகம்மது, கடையநல்லூர் தொகுதி தலைவர் நயினாமுகம்மது கனி, நகர தலைவர் யாசர்கான், நகர செயலாளர் அப்துல்காதர் உட்பட பலர் பங்கேற்று கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்.டி.பி.ஐ.கட்சியினர் 91 பேரை புளியங்குடி டி.எஸ்.பி.சக்திவேலு, இன்ஸ்பெக்டர் அலெக்ஸ், சப்.இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags : protest ,SDPI ,
× RELATED பைக் மீது லாரி மோதி ஏட்டு பலி