தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலி

தஞ்சை, டிச. 11: தஞ்சை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயில் மோதி பெண் பலியானார்.தஞ்சை அருகே உள்ள தளவாய்பாளையம் தண்டவாளம் அருகே 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கை, காலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து தஞ்சை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில்வேலன், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். ஆனால் இறந்து கிடந்த பெண் யார் என்ற விபரம் தெரியவில்லை. திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி பயணிகள் ரயில் நேற்று காலை சென்றபோது ரயில் வருவது தெரியாமல் அந்த பெண் தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி இறந்துள்ளார் என்று போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Advertising
Advertising

Related Stories: