×

வி.கே.புரம் அருகே புலவன்பட்டியில் பாலம் உடைந்ததால் 4கிமீ சுற்றிச் செல்லும் பொதுமக்கள் புதிதாக அமைக்க கலெக்டரிடம் கோரிக்கை

வி.கே.புரம், டிச.11: விகேபுரம் அருகே தொடர் மழையால் பாலம் இடிந்ததால் இரு கிராம மக்கள் 4 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதனால் போர்க்கால அடிப்படையில் புதிய பாலம் கட்டித்தர வேண்டுமென பொதுமக்கள் கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர்.
வி.கே.புரம் அருகே சிவந்திபுரம் ஊராட்சியிலுள்ள புலவன்பட்டி ஊர்நலக் கமிட்டி தலைவர் இஸ்ரேவேல் மற்றும் புலவன்பட்டி, வெயிலமுத்தன்பட்டி ஊர் நிர்வாகிகள் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட புலவன்பட்டி  கிராமத்தில் 2 ஆயிரம் பேரும், வெயிலமுத்தன்பட்டியில் 300 பேரும் வசித்து வருகிறோம். இந்த இரு கிராமங்களிலிருந்தும் அருகிலுள்ள வி.கே.புரத்திற்கு செல்வதற்காக கட்டப்பட்ட  காங்கிரீட் பாலம் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் இருந்தது. கடந்த 2017ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேி இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படாததால் தற்பொழுது பெய்த தொடர் மழையால் கடந்த 4ம் தேதி முற்றிலிலுமாக உடைந்து விட்டது.

இதனால் சுமார் 4 கிலோமீட்டர் தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.   மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்குக்கும் வேலைக்கு செல்வோரும் உரிய நேரத்தில் செல்ல முடியவில்லை. இதோடு அவசரத்திற்கு மருத்துவமனைக்கும் செல்ல முடியவில்லை. எனவே, உடைந்த பாலத்தை அப்புறபடுத்திவிட்டு அதே இடத்தில் சற்று அகலமான புதிய பாலம் கட்டித்தர போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க ஊர் மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : Collector ,public ,bridge ,field ,VK Puram ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...