சம்பா, தாளடி சாகுபடி மும்முரம் தஞ்சைக்கு 2,473 டன் உரம் வந்தது

தஞ்சை, டிச. 11: தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி நடந்து வருவதால் 2,473 டன் உரம் வந்தது.தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி சாகுபடி பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. பயிர்களுக்கு தேவையான உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை நிலையங்கள் மூலம் வினியோகம் செய்யப்பட்டு வருகின்றன.இதற்காக வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து உரம் கொண்டு வரப்படும். அதன்படி சென்னை துறைமுகத்தில் இருந்து 36 வேகன்களில் ரயில் மூலம் 2,101 டன் யூரியா, 6 வேகன்களில் 372 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 2,473 டன் உரம் நேற்று முன்தினம் தஞ்சை ரயில் நிலையத்துக்கு வந்தது.
இந்த உரமூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags : Sampa ,Daladi ,Mummuram ,
× RELATED குழித்துறை நகராட்சியில் மட்கும்...