நெடுஞ்சாலைதுறை ஓய்வுபெற்றோர் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

தென்காசி, டிச.11:  தென்காசியில் நெடுஞ்சாலைத்துறை ஓய்வுபெற்றோர் நலச்சங்க மாவட்ட பொதுக்குழு மற்றும் 8ம் ஆண்டு துவக்கவிழா நடந்தது. மாவட்ட தலைவர் ஆறுமுகம் தலைமை வகித்தார். சிவசுப்பிரமணியன், எர்னஸ்ட், ராமசுப்பு, செல்வராஜ், முகம்மது பஷீர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை செயலாளர் ஜெயராஜ் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் இசக்கி இரங்கல் தீர்மானம் வாசித்தார். மாநில தலைவர் திருவேங்கடராஜ் துவக்கி வைத்தார். மாவட்ட செயலாளர் வேம்பு அறிக்கை வாசித்தார். மாவட்ட பொருளாளர் நாராயணன் நிதிநிலை அறிக்கை வாசித்தார். மாநில பொது செயலாளர் தமிழரசு, அமைப்பு செயலாளர் தங்கவேல், மாநில பொருளாளர் ஜேசுதாஸ்டேனியல், மாநில செயலாளர் சக்திவேல், குமாரசாமி, மாரியப்பன், சலீம், பாலசுப்பிரமணியன், அரசு ஒப்பந்தக்காரர் அருணாசலம் ஆகியோர் பேசினர். துணை செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.

தென்காசியை தனிமாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, கலெக்டர் அலுவலகத்தை ஒழங்குமுறை விற்பனைக்கூடம் அருகில் அமைக்க வேண்டும். நகர புறவழிச்சாலை, தென்காசி- நெல்லை நான்குவழிச்சாலை பணிகளை விரைவுபடுத்த வேண்டும். செங்கோட்டை -சென்னை சிலம்பு ரயிலை தினமும் இயக்க வேண்டும். கொல்லம் விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும். 8வது ஊதியக்குழு நிலுவை தொகையை 1.1.2016 முதல் ரொக்கமாக வழங்கிடவும், மருத்துவப்படி ஆயிரமாகவும் வழங்க வேண்டுமென்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories:

>