×

வென்னிமலை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா

பாவூர்சத்திரம், டிச.11: பாவூர்சத்திரம் காமராஜ் நகரில் அமைந்துள்ள வென்னிமலை முருகன் கோயிலில் வருஷாபிஷேக விழா  நடந்தது.   
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு காலை 7 மணி முதல் 10 மணி வரை கணபதி ஹோமம்,  ஸூத்தம், புருஷ ஸூத்தம், தீபாராதனை நிகழ்ச்சியும், 10.05  மணி முதல் 12 மணி வரை மூலமந்திர ஜபம்,  ருத்ர ஜபம்,  ஸூத்தம், புருஸூத்தம்,  யாகசாலை பூஜை, மஹா பூர்ணாஹூதி,  தீபாராதனை நடந்தது. பின்னர் மூலவர் மற்றும் பரிவார மூர்த்திகள், விமானங்கள் ஆகியவை கும்பாபிஷேகம்நடந்தது.

அதனைத் தொடர்ந்து உற்சவருக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது.  இதில் கீழப்பாவூர் மற்றும் பாவூர்சத்திரம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு மகாபிரசாதம் வழங்கப்பட்டது.  அதனை தொடர்ந்து மாலை வரை சிறப்பு பூஜைகள் நடந்தது.  மாலை 5 மணிக்கு சாயரட்சை, தீபாராதனை,  மாலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி சப்பரங்களில் வீதியுலா நடந்தது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Varshapeesha Festival ,Vennimalai Murugan Temple ,
× RELATED மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை...