×

மருத்துவ சமுதாய முன்னேற்ற நலச்சங்க கூட்டம்

பாவூர்சத்திரம், டிச.11: பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு அனைத்து மருத்துவ சமுதாய முன்னேற்ற நலச்சங்கம் மற்றும் நெல்லை மாவட்ட மருத்துவ சவரம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலச்சங்க செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் குணேசகரன், பொருளாளர் வைத்திலிங்கம், அவை தலைவர் சம்போ முருகன், இளைஞரணி தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு முடி திருத்துவது சம்பந்தமாக முதல் கட்டமாக குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகம், காவல்துறை சேர்ந்து எடுக்கும் முடிவின்படி முடிதிருத்தும் சங்கம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும், அதன்பிறகு மாவட்ட முழுவதும் இதுசம்பந்தமாக அறிக்கை அனுப்பப்படும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட இளைஞரணி செயலாளர் பாலசங்கர் நன்றி கூறினார். கூட்டத்தில் ஆலங்குளம், வி.கேபுரம், கீழச்சுரண்டை, சுரண்டை, பாவூர்சத்திரம், கீழப்பாவூர், செட்டியூர், கல்லூரணி,ராமச்சந்திரபட்டிணம், ஆவுடையானூர் உட்பட பல்வேறு பகுதிகளிலிருந்து சங்க உறுப்பினர்கள் பலர் திரளாக பங்கேற்றனர்.

Tags : Medical Society Progress Welfare Meeting ,
× RELATED பாவூர்சத்திரம் வென்னிமலை கோயிலில் இன்று வருஷாபிஷேகம்