சிலம்ப போட்டி ஆலங்குளம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் சாதனை

ஆலங்குளம், டிச. 11: ஆலங்குளம் ராமகிருஷ்ணா பள்ளி மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் சாதனை படைத்தனர்.

அண்ணா மற்றும் பாரதியார் நினைவு விளையாட்டு போட்டிகள் பள்ளி கல்வி துறையால் நடத்தப்படுகிறது. வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் ஆய்க்குடி விவேகானந்தா வித்தியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இளையோர் பிரிவில் இரட்டைக்கம்பு வீச்சில் ஆலங்குளம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் அபிஷேக் இரண்டாம் பரிசும், ஒற்றை கம்பு வீச்சில் மாணவர் பரசுராம் மூன்றாம் பரிசும், மூத்தோர் பிரிவில் இரட்டை கம்பு பிரிவில் மாணவன் தமிழ்செல்வன் இரண்டாம் பரிசும் பெற்று சாதனை படைத்தனர். வெற்றிபெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் சித்ராதேவி, நிர்வாக அலுவலர் நித்யதாரிணி, பள்ளிமுதல்வர் செல்வி மற்றும் பயிற்சியாளர் முகம்மதுசுபகான், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் பாராட்டினர்.

Related Stories: