தம்மம்பட்டி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

தம்மம்பட்டி, டிச.11:தம்மம்பட்டி அருகே வெதம்பியம் அருகில் முருகேசன் என்பவரது நிலத்தில், மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றுள்ளது. இதை பார்த்து முருகேசன் மனைவி பூமதி இதுகுறித்து தம்மம்பட்டி வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் வந்த  வனச்சரக அலுவலர் அசோக்குமார், வனவர் சுதாகர் மற்றும் கணேசன், வனக்காப்பாளர்கள் சிவக்குமார் மற்றும் பாம்பு பிடி வீரர் லாரா ஆகியோர், 10 அடி நீள மலைப்பாம்பை மீட்டனர். தொடர்ந்து, அருகிலுள்ள வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

Tags : Dammampatti ,
× RELATED 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 450 தனித்தேர்வர்கள் விண்ணப்பிப்பு