குடும்பநலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில் 20ஆண்களுக்கு கருத்தடை

சேலம், டிச.11:சேலம் மாவட்டத்தில் குடும்ப நலத்துறை சார்பில் நடந்த விழிப்புணர்வு முகாமில், 20 ஆண்கள் கருத்தடை செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் குடும்பநல துறை சார்பில் ‘வாசக்டமி’ என்னும் ஆண்களுக்கான, தழும்பற்ற  நவீன கருத்தடை சிகிச்சை விழிப்புணர்வு முகாம் நடந்தது. இந்த முகாமில், 20 ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டது கவனம் ஈர்த்துள்ளது. தமிழகத்ைத பொறுத்தவரை  பெண்கள் மட்டுமே அதிகளவில் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து கொள்கின்றனர். இருதயம், நீரிழிவு, ரத்தசோகை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளால பாதிக்கப்பட்ட பெண்கள் கருத்தடை செய்ய முடியாது. அதையும் மீறி கருத்தடை செய்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில் குடும்ப சூழலை கருத்தில் கொண்டு, தொடர்ந்து கருத்தரிப்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் பலருக்கு உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், ஆண்களை கருத்தடை சிகிச்சைக்கு உட்படுத்துவது தான், ‘வாசிக்டமி’ என்னும் இந்த நவீன முறையின் சிறப்பம்சமாகும்.  

இதுகுறித்து மாவட்ட குடும்பநல துணை இயக்குனர் வளர்மதி கூறுகையில், ‘‘தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களை தவிர்த்து பெரும்பாலான மாவட்டங்களில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை குறித்த விழிப்புணர்வு போதிய அளவில்லை. இதை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்டத்தில் தொடர் விழிப்புணர்வு முகாம் அரசு மருத்துவமனை, தாலுகா மருத்துவமனைகளில் நடத்தப்பட்டது. இதில் 20ஆண்கள் கருத்தடை சிகிச்சை செய்து கொண்டுள்ளனர், இவர்களுக்கு ₹1,100 ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது. தற்போது வழங்கும் ஊக்கத்தொகையை அதிகரித்து ₹5 ஆயிரமாக வழங்கினால் அதிகளவு ஆண்கள் கருத்தடை செய்து கொள்ளும் வாய்ப்புள்ளது.’’

Related Stories: