×

பில்லுக்குறிச்சியில் 2ம் போக சாகுபடிக்கு உழவுப்பணி துவக்கம்

இடைப்பாடி, டிச.11: மேட்டூர் அணை கிழக்கு காவல்வாய் கரையோரம் பில்லுக்குறிச்சி சுற்றுவட்டார  பகுதியில், அறுவடை பணிகளை முடித்த விவசாயிகள், இரண்டாம் போக சாகுபடிக்காக உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு கால்வாயில் பாசனத்துக்கு திறக்கப்படும் தண்ணீர் பூலாம்பட்டி, காட்டுவளவு, வாய்க்கால்பாலம், பில்லுக்குறிச்சி, எல்லமடையம், மூலப்பாதை, குள்ளம்பட்டி, ஒடசக்கரை, கோனகாலத்தனூர், தேவூர், அம்மாபாளையம், புள்ளாக்கவுண்டம்பட்டி, கத்தேரி வழியாக நாமக்கல் மாவட்டத்திற்கு செல்கிறது. கிழக்கு கால்வாய் கரையோரப் பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு அறுவடை செய்யப்பட்டது. இதையடுத்து தற்போது இரண்டாம் கட்ட சாகுபடிகளை விவசாயிகள் துவக்கியுள்ளனர். இதற்கான நிலத்தை தயார் படுத்த டிராக்டர் மூலம் உழவுப்பணிகளை துவக்கியுள்ளனர். இங்கு கரும்பு, நெல், மஞ்சள் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்யவுள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Bilgurichi 2 ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு