சேலத்தில் ஏஐடியூசி நூற்றாண்டு விழா

சேலம், டிச.11:ஏஐடியூசி சார்பில் நூற்றாண்டு விழா, மூத்த தொழிற்சங்க தலைவர்களுக்கு பாராட்டு விழா, நூற்றாண்டு மலர் வெளியீட்டு விழா என முப்பெரும் விழா நேற்று சேலத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் முருகன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் விமலன் வரவேற்றார்.
ஏஐடியூசி மாநில செயலாளர் ஆறுமுகம், நூற்றாண்டு மலரை வெளியிட்டு பேசினார். இதைத் தொடர்ந்து 21 தொழிற்சங்க தலைவர்கள் கவுரவிக்கப்பட்டனர். கூட்டத்தில், ஜனவரி 8ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்தில், அனைத்து துறையினரும் பங்கேற்பது எனவும், அது தொடர்பாக அனைத்து தொழிற்சாலைகள் முன்பு வாயிற்கூட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் மோகன், நிர்வாகிகள் வேணுகோபால், பரமசிவம், முனுசாமி, கருணைதாஸ், தண்டபாணி, கேசவமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : AITUC ,Salem ,
× RELATED திருச்சி போலீசார் நடவடிக்கை வனத்துறை...