×

இடைப்பாடி நகராட்சியில் 855 கிலோ இ-வேஸ்ட் சேகரிப்பு

இடைப்பாடி, டிச.11: இடைப்பாடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட கழிவுகளில் இருந்து பிரிக்கப்பட்ட 855 கிலோ இ-வேஸ்ட்  சென்னைக்கு அனுப்பப்பட்டது. இடைப்பாடி நகராட்சி பகுதியில் உள்ள வார்டுகளில் தீவிர துப்புரவு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. துப்புரவு ஊழியர்கள் ஒன்றிணைந்து குப்பைகளை சேகரித்து வருகின்றனர். இந்த கழிவுகளில் பழைய கம்ப்யூட்டர்கள், ரிமோட்டுகள், செல்போன்கள் உள்ளிட்ட உபயோகமில்லாத எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பிரிக்கப்பட்டு தனியாக சேகரிக்கப்பட்டது. இ-வேஸ்ட் அழிக்கும்போது அதிலிருந்து கதிர்வீச்சு கிளம்பி சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுமென்பதால், தனியாக சேகரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இடைப்பாடி நகராட்சி ஒப்பந்தம் ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, இங்கு சேகரிக்கப்படும் இ-வேஸ்ட் பொருட்கள் சென்னைக்கு அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து, இடைப்பாடி நகராட்சி பகுதியில் சேகரிக்கப்பட்ட 855 கிலோ இ-கழிவுகள் இரண்டு கட்டமாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கழிவுகளை அனுப்பும் நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையாளர் சென்னகிருஷ்ணன் கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Tags : corporation ,
× RELATED சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர்...