×

கெங்கவல்லியில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சுத்திறன் பயிற்சி

கெங்கவல்லி, டிச.11: சேலம்  மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம், கெங்கவல்லி  ஒன்றியத்தில் உள்ள தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு, ஆங்கில பேச்சுத்திறன்  வளர்த்தல் பயிற்சி, மூன்று சுற்றுகளாக  நடந்தது. நேற்று நடந்த பயிற்சியில்  50 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  நிகழ்ச்சியில், கெங்கவல்லி வட்டார கல்வி  அலுவலர்கள்  வாசுகி, அந்தோணி முத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சேலம்  மாவட்ட ஆசிரியர்  கல்வி மற்றும் பயிற்சி நிறுவன பேராசிரியர் மற்றும்  பயிற்சியின் ஒருங்கிணைப்பாளர் கலைவாணன், ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல்  குறித்த ஆலோசனைகளை வழங்கினார். இதில் கருத்தாளர்களாக செங்காடு ரோசலின்  ராணி, வசந்தி, சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு ஆசிரியர்களுக்கு பயிற்சியை  வழங்கினர்.

Tags : Kengevalli ,
× RELATED ஆங்கில கடிதத்துக்கு இந்தியில் பதில் - வீரமணி கண்டனம்