×

காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கிருத்திகை சிறப்பு வழிபாடு

ஆட்டையாம்பட்டி, டிச.11: காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரைத்தையொட்டி நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். சேலம்- நாமக்கல் மாவட்ட எல்லையில் காளிப்பட்டியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற கந்தசாமி கோயிலில் கார்த்திகை மாதம் செவ்வாய்க்கிழமையையொட்டி, கிருத்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மூலவர் கந்தசாமிக்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடத்தப்பட்டது.

இதையடுத்து, பலவிதமான வண்ண மலர்களுடன் சுவாமிக்கு ராஜ அலங்காரம் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் சார்பில் அன்னதானமும், மாலை சுவாமி வீதி உலாவும் நடைபெற்றது.

Tags : Kalipatti Kandaswamy Temple ,
× RELATED காளிப்பட்டி கந்தசாமி கோயிலில் சிறப்பு வழிபாடு