×

ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில் பூட்டப்படும் இலவச கழிப்பறை

ராசிபுரம், டிச.11: ராசிபுரம்  புதிய பஸ் நிலையத்தில், கட்டண கழிப்பிடத்துக்கு வருவாய் ஏற்டுத்த, இலவச பெண்கள்  கழிப்பறையை பூட்டி வைப்பதால் பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனர். ராசிபுரம் புதிய பஸ் நிலையத்தில், பயணிகள் வசதிக்காக நகரட்சி சார்பில் இரண்டு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு கழிப்பறை இலவசமாக பயன்படுத்தவும், மற்றொரு கழிப்பறை தனியாரிடம் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. தனியார் நிர்வகிக்கும் கழிப்பறைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பதால், பொதுமக்கள் யாரும் அங்கு செல்வதில்லை. மாறாக இலவச கழிப்பறையையே பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தனியார் கழிப்பறையை பராமரிக்கும் நபர்கள், நகராட்சி இலவச கழிப்பறையை நிர்வகிக்கும் நபரிடம் கூறி, அவரை கவனித்து, இலவச கழிப்பறையை பூட்டி விடுகின்றனர்.

இதனால் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பெண்கள் பெரிதும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். தண்ணீர் வசதியுடன் கழிப்பறை இருந்தும், பூட்டி வைப்பதால் வேறு வழியின்றி காசு கொடுத்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, தனியார் பராமரிக்கும் கழிப்பறைக்கு ஆதரவாக செயல்படும் ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச கழிப்பறையை பயன்பாட்டுக்கு திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Rasipuram ,bus station ,
× RELATED ராசிபுரம் நகராட்சி குப்பை கிடங்கில் தீ விபத்து