×

புதுகையில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு

புதுக்கோட்டை, டிச.11: மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு புதுக்கோட்டையில் வரும் 14ம்தேதி நடக்கிறது. கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:மாநில சட்டப் பணிகள் குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சமரச தீர்வு காண தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் 14ம் தேதி (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பக்கோணம்) தொடர்பான மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு சமரச தீர்வு கண்டு சம்பந்தப்பட்டவர்கள் பயனடையலாம்.இது தொடர்பாக கும்பகோணம் மண்டலம் 0435-2403724-26 tel:0435-2403724-26 , 90432 38312 tel:90432%2038312 , 86675 90214 tel:86675%2090214,
திருச்சி மண்டலம் 0431-2415551-54 tel:0431-2415551-54 , 94878 98057 tel:94878%2098057 , 98945 91570 tel:98945%2091570 , காரைக்குடி மண்டலம் 04565-234125-26 tel:04565-234125-26 , 94878 98095 tel:94878%2098095 , 94878 98103 tel:94878%2098103,புதுக்கோட்டை மண்டலம் 04322-266111 tel:04322-266111 , 94878 98065 tel:94878%2098065 , 88706 11267 tel:88706%2011267 என்ற தொலைபேசி, செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
14ம் தேதி நடக்கிறதுபுதுக்கோட்டை தெற்கு ராஜா வீதியில் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் மாயமானதாக கூறப்பட்ட 13.75 கிலோ தங்க நகைகளுக்கு பதிலாக பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு இன்சூரன்ஸ் மூலம் நேற்று (செவ்வாய்க்கிழமை) முதல் தொடங்கி நாளை (வியாழக்கிழமை) வரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது.

Tags :
× RELATED கணவருடன் சேர்த்துவைக்கக் கோரி கடையத்தில் இளம்பெண் தர்ணா போலீசார் சமரசம்