×

வாடிக்கையாளர்கள் நிம்மதி கறம்பக்குடி அருகே வயல் கிணற்றில் விழுந்த பசு மாடு உயிருடன் மீட்பு

கறம்பக்குடி, டிச.11:கறம்பக்குடி அருகே வயல் கிணற்றில் விழுந்த பசு மாட்டை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி துவார் அருகே உள்ள கெண்டையம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சின்னையா. விவசாயி இவருக்கு சொந்தமான பசுமாடு வழக்கம் போல மேச்சலுக்கு அப்பகுதி பொட்டல்வெளி பகுதிக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பாததால் மாட்டை தேடியுள்ளனர். அப்போது அருகே உள்ள 60 அடி ஆழமுள்ள தண்ணீர் நிரம்பிய வயல் கிணற்றில் விழுந்து தவித்து கொண்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சின்னையா உடனே கறம்பக்குடி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் சிங்கமுத்து தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த பசுவை கயிறுகட்டி உயிருடன் மீட்டனர். தீயணைப்பு வீரர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Customers ,field ,Karambakkudi ,
× RELATED ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு அஸ்வின்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள்