×

வேளாண் அதிகாரி அறிவுரை அனைத்து தரப்பு மக்களையும் சட்டம் சமமாக தான் பார்க்கிறது முதன்மை அமர்வு நீதிபதி பேச்சு

பெரம்பலூர்,டிச.11:அனை த்து தரப்பு மக்களையும் சட் டம் சமமாகத்தான் பார்க்கி றது. பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடந்த மனித உரிமைகள்தின சட்ட உத்தி விழிப்புணர்வு முகாமில் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பேசினார்..பெரம்பலூர் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், உலக மனித உரிமைகள் தினத்தை முன்னி ட்டு சட்டஉதவி விழிப்புணர்வு முகாம் பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளரும் சார்பு நீதிபதியுமான வினோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை அமர்வு நீநநிமன்ற நீதிபதியுமான மலர்விழி தலைமை வகித்துப்பேசுகையில், அனைத்து தரப்பு மக்களையும் சட் டம் சமமாகத்தான் பார்க்கிறது, பொதுமக்கள், பணி யாளர்கள், பெண்கள் மற் றும் குழந்தைகள் மீது மனி த உரிமைகள் மீறல்கள் நிகழும் போது அதை தடுத்திட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அவர்களு க்கு துணை நின்று தக்க சட்ட உதவியினை வழங்கி காத்திடும் என்றார்.
இதில் மாவட்ட உரிமையில் நீதிபதி ரவிச்சந்திரன், குற் றவியல் நீதிமன்ற நீதிபதி கள் அசோக் பிரசாத், கருப் புசாமி மற்றும் வழக்கறிஞர் கள், பொதுமக்கள்,ஒருங்கி ணைந்த நீதிமன்றப் பணி யாளர்கள் உட்பட பலர் கல ந்து கொண்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை சட்ட ப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக குழு அலுவலர் வெள்ளைசாமி செய்திருந்தார்.

Tags :
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா