×

கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார் நெற்பயிரில் இலைசுருட்டு புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி

தற்போது நிலவி வரும் மழைப்பொழிவின் காரணமாக காற்றின் ஈரம் 90 சதவீதம் முதல் 97 சதவீதம் உள்ளதால் இலைசுருட்டு புழு தாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதன் அறிகுறிகள் நெற்பயிர் இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும். இலைசுருட்டு புழுவை கட்டுப்படுத்த விவசாயிகள் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை தொழில் நுட்பத்தை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். தழைச்சத்து உரமான யூரியா மற்றும் அம்மோனியா சல்பேட் உரங்களை அதிகமாக இடுவதை தவிர்க்க வேண்டும். டிரைக்கோகிரேம்மா கிரேனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44 மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை 5சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள் )என்ற அளவில் ஒரு ஹெக்டேருக்கு விட வேண்டும்.

தேவைக்கு அதிகமாக தொழு உரம் இடுவதை தவிர்க்க வேண்டும். வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனங்களை அகற்றுவது நல்லது. வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பண்ணை 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும். பூச்சி தாக்குதலின் தாக்கம் அதிகம் இருப்பின் பின்வரும் ஏதாவது ஒரு பூச்சிக்கொல்லி மருந்தினை பாசரான் 35 இசி 1500 மிலி/ஹெக்டேர், குளோரோனபரிபாஸ் 20 % இசி 1250 லி/ஹெக்டேர், அசிபேப் 75% எஸ்பி 666-1000 கி/ஹெக்டேர், என்ற அளவில் காலை அல்லது மாலை வேளையில் தெளித்து பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம் என வேளாண் துறையினர் ஆலோசை வழங்கியுள்ளனர்.

Tags : Collector ,mite attack ,attack ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...