×

தொழில்நுட்ப வல்லுனர் விளக்கம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல்

பாடாலூர், டிச 11: ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேட்புமனுத் தாக்கலின் 2ம் நாளான நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று முன்தினம் தொடங்கியது. அதன்படி ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 2 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர், 18 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், 39 ஊராட்சி தலைவர் , 300 ஊராட்சி வார்டு உறுப்பினர் என மொத்தம் 359 பதவிகளுக்கு வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக 174 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இந்த தேர்தலுக்காக 51 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆலத்தூர் ஒன்றிய பகுதியில் 89,406 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். வேட்புமனு தாக்கலின் முதல் நாளான நேற்று முன்தினம் புஜங்கராயநல்லூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 18 பேரும் என 20 பேர் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். 2-ம் நாளான நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

கூடுதலாக சர்க்கரை உற்பத்தி இதுகுறித்து முன்னோடி கரும்பு விவசாயியான செந்துறை ஞானமூர்த்தி தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் வரும் 15தேதிகளுக்குள் அரவைப்பணி துவங்கினால் தான் காத்திருக்கும் கரும்பு பயிர்களுக்கு பாதிப்பில்லாமல் இருக்கும். சமீபத்தில் பெய்த கன மழையால் கரும்பு டிராக்டர்கள், லாரிகள் ஆலையை நோக்கி பயணிக் கூடி ய பழுதடைந்துள்ள சாலைகளை சரிசெய்ய வேண்டும். வழித்தடங்களில் கரும்பு லோடுகளை உரசும்படி தாழ்வாக உள்ள மின்கம்பிகளை உயர்த்தி கட்ட வேண்டும். நடப்பாண்டு 1.75லட்சம் டன் கரும்பு அரைப்பதால் ஆலை 72 நாட்கள் மட்டுமே ஓடும். இதனால் மின்உற்பத்தியும் அதே நாட்கள்தான் இயங்கும். அதனால் மேலும் 1லட் சம் டன் கரும்பை வெளியில் இருந்து எடுத்து அரைக்க வேண்டும். இதனால் கூடுதலாக 28 நாட்களுக்குமேல் சர்க்கரை உற்பத்தியை பெருக்குவதோடு, மின் உற்பத்தியையும் கூட்ட முடியும் எனத் தெரிவித்தார்.

Tags : Panchayath Ward ,Alathur ,
× RELATED ஆதனூர் அரசு பள்ளி ஆண்டுவிழா