×

வேளாண் பயிர்களில் அதிக மகசூல் பெற நுண்ணூட்டச் சத்து மிகவும் அவசியம்

தா.பழூர், டிச. 11:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழன்மாதேவி கிரீடு வேளாண்மையத்தின் சார்பில் பயிர்களில் அதிக மகசூல் பெற பூஸ்டர் மற்றும் டானிக்குகளின் பங்குகள் பற்றி விவசாயிகளுக்கு தெரிவித்திருப்பது. மனிதனுக்கு சரிவிகித உணவு எவ்வளவு அவசியமோ அதுபோல பயிர்களுக்கும் நுண்ணூட்டச் சத்து மிகவும் அவசியமான ஒன்றாகும். ஊட்டச்சத்தை பயிர்களுக்கு அதன் தேவைக்கேற்றவாறும், மண்ணின் தரத்திற்கு ஏற்றவாறு அளிப்பதே சாலச்சிறந்தது. இதன்மூலம் பயிர்களில் போதிய மகசூலை பெற இயலும். நுண்ணூட்டச் சத்து அதனை அளிக்கும் தருணம் மற்றும் முறைகள் பயிருக்கு பயிர் வேறுபடுகிறது. பெரும்பாலும் விவசாயிகள் பேரூட்டச்சத்திற்கு முக்கியத்துவம் அளித்து நுண்ணூட்டச்சத்துக்களை கருத்தில் கொள்ளாமல் அவைகளை பயிர்களுக்கு அளிக்காமல் விட்டுவிடுகின்றனர். இதனால் மகசூல் இழப்பு ஏற்படுகிறது.நுண்ணூட்டச்சத்துக்கள் மூலம் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் பூஸ்டர் மற்றும் டானிக்குகளை கண்டுபிடித்துள்ளது.

உளுந்து பயிரில் அதிக மகசூல் பெற பூ மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 2 கிலோ பயறு ஒண்டர் பூஸ்டரினை தேவையான அளவு ஒட்டும் திரவம் மற்றும் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதன் மூலம் பூக்கள் உதிர்வது குறையும்இ வறட்சியைத் தாங்கும் தன்மை கிடைக்கும் மற்றும் பயறு விளைச்சலில் 20 சதம் மகசூல் கூடுதலாக கிடைக்கும்.நிலக்கடலை சாகுபடியின் போது பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் ஏக்கருக்கு 2 கிலோ நிலக்கடலை ரிச் பூஸ்டரினை 200 லிட்டர் தண்ணீர் மற்றும் தேவையான அளவு ஒட்டும் திரவம் கலந்து தெளிப்பதன் மூலம் அதிக பூ பிடிக்கும் திறன் மற்றும் 15 சதம் மகசூல் கூடுதலாக கிடைப்பதோடு பொக்கு கடலைகளின் அளவு குறைந்து பருப்பு முழுமையாகஇ திறனாக நன்கு எண்ணெய் சத்தும் நிறைந்து காணப்படும்.

பருத்தி பயிருக்கு பருத்தி பிளஸ் பூஸ்டரினை ஏக்கருக்கு 2.5 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவத்தில் தெளிப்பதன் மூலம் பூ மற்றும் சப்பைகள் உதிர்வது குறையும். காய்கள் முழுமையாக வெடித்து சீரான அறுவடைக்கு வழிவகுக்கும் மற்றும் மகசூல் 18 சதம் கூடுதலாக கிடைக்கும்.மக்காச்சோள பயிர்களில் மக்காச்சோள மேக்சிம் என்கிற பூஸ்டரினை ஏக்கருக்கு 3 கிலோவை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து ஆண் மஞ்சரி மற்றும் மணி உருவாகும் பருவம் தெளிப்பதன் மூலம் மணி பிடிக்கும் திறன் அதிகரிப்பதோடு மகசூல் எப்போதும் பெறுவதைவிட 20 சதம் கூடுதலாக கிடைக்கும்.

கரும்பிற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கி கலந்து பூஸ்டரினை கரும்பு பூஸ்டரினை கரும்பு நட்ட 45வது நாள் 1 கிலோவும்இ 60-ம் லீள் 1.5 கிலோவும் மற்றும் 75வது நாள் 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிப்பதன் மூலம் கரும்பில் இடைக்கணுக்களின் நீளம் கூடும் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடை அதிகரிக்கும் மற்றும் மகசூல் 20 சதம் கூடுதலாக கிடைக்கும்.தென்னை மரத்தில் குரும்பு கொட்டுதல் மற்றும் காய் பெரிதாக கிடைக்க தென்னை டானிக்கை வேர் மூலம் செலுத்துதல் வேண்டும். அதாவது தென்னை டானிக்கை மரத்திலிருந்து இரண்டு அடி தூரத்தில் சுமார் நான்கு அங்குல ஆழத்தில் உள்ள வெள்ளை நிற வேர் ஒன்றை தேர்வு செய்து வேரின் நுனியை கத்தி கொண்டு சாய்வாக சீவி விடவும். பின்பு டானிக் உள்ள பையின் அடிவரை வேரை நுழைத்து வேரையும் பையின் மேல் பாகத்தையும் நூலால் கட்டி டானிக் சிந்தாமல் மண்ணை அனைத்து விடவும்.மண்ணின் ஈரத்தன்மை குறைவாக இருந்தால் ஒரு மணிநேரத்தில் டானிக்கை வேர் உறிஞ்சிவிடும்.

ஆறு மாதத்திற்கு ஒரு முறை 200 மில்லி டானிக்கை வேர் மூலம் செலுத்துவதன் மூலம் இலைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் பச்சையம் கூடும் பாளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் குரும்பை கொட்டுதல் குறையும் காய்கள் பெரிதாகி பருப்பு எடை கூடும் மற்றும் பூச்சி நோய் எதிர்ப்பு சக்தி கூடும் என கிரீடு வேளாண் அறிவியல் மையம் வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா கூறினார்.

Tags :
× RELATED பெரம்பலூரில் செயல்படும் லால்குடி...