×

வரும் 15ம் தேதி எறையூர் சர்க்கரை ஆலையில் அரவை பணி துவங்கப்படுமா?

பெரம்பலூர்,டிச.11: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் அரவைப்பணி அடைமழையால், வயல்களில் தண்ணீர் வடியாததால், ஆரம்பத்திலேயே தடைப்பட்டது. 15ம் தேதியாவது பணி தொடங்குமா என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூர் ஊராட்சியில் கடந்த 1978ம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலை தொடங்கப்பட்டது. இந்த சர்க்கரை ஆலையில் விவசாயிகளும், தமிழக அரசும் இணைந்து பங்குதாரர்களாக உள்ளனர். இந்த சர்க்கரை ஆலையின் 42வது அரவை பருவம் டிசம்பர் மாதம் 7ம்தேதி தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சர்க்கரைஆலைக்காக பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெரம்பலூர், எறையூர், வி.களத்தூர், லெப்பைக்குடிகாடு, அகரம்சீகூர், புதுவேட்டக்குடி, கிருஷ்ணாபுரம், தாமரைப்பூண்டி ஆகிய 8 கரும்பு கோட்டங்களில் இருந்து நடப்பாண்டு சுமார் 4 ஆயிரம் கரும்பு விவசாயிகளால் 7,012 ஏக்கரில் பயிரிடப்பட்டு பதிவு செய்யப்ப ட்ட 1.75 லட்சம் டன் கரும்புகள் அரவைக்காக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இது தவிர கடலூர் மாவட்டம், பெண்ணாடம் அம்பிகா சுகர்ஸ் நிறுவனத்திடமிருந்து தொழுதூர், பெண்ணாடம் ஆகிய 2 தற்காலிக கோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள 50 ஆயிரம் டன் கரும்பு பெற்று அரவைக்கு பயன் படுத்துவது எனத்தி ட்டமிடப்பட்டுள்ளது. கடும் வறட்சி, பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கடந்த 2015-2016 மற்றும் 2016-2017 ஆகிய 2 ஆண்டுகளில் வெட் டியனுப்பிய கரும்புக்கான பாக்கித் தொகை ரூ31.53 கோடியை ஆலை நிர்வாகம் பெற்றுத்தராமல் இழுத்தடித்து வருகிறது. மேலும் 2016ல் அரவைப்பணி தொ டங்கிய 30நாட்களில் 9மு றை இயந்திர கோளாறு காரணமாக அரவைப்பணிகள் தடைபட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடப்பாண்டு அரவைப்பணி கடந்த 7ம்தேதி தொடங்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

ஆனால் பெரம்பலூர் மாவட்டத்தில் பெய்த அடைமழை காரணமாக கரும்பு வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் கட்டிங் ஆர்டர் தரப்படாமல் அரவைப்பணிகள் தொடங்கப்படவில்லை. இதில் மழைநீர் தேங்கியிருப்பது 30சதவீத கரும்பு வயல்கள்தான் எனும்போது, மீதமுள்ள 70 சதவீத கரும்பு வயல்கள் கட்டிங் ஆர்டர் தரப்படாததால் காய்ந்து வரும்சூழல் ஏற்பட்டுள்ளது.எனவே 15ம்தேதியாவது அரவைப்பணிகள் தொடங் குமா என கரும்பு விவசாயி கள் கேள்வி எழுப்பியுள்ள னர்.

Tags : Aravaru Sugar Factory ,
× RELATED துபாய் வெள்ளத்தில் மகன் உயிரிழந்த...