×

குடிநீர் குழாய் பதிக்க தோண்டிய பள்ளங்களால் வாகன ஓட்டிகள் திணறல்

கரூர், டிச. 11: கரூர் மேட்டுத்தெரு மற்றும் மாவடியான் கோயில் தெருக்களில் குடிநீர் குழாய் பொருத்த தோண்டப்பட்ட பள்ளத்தை சரி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சி பகுதி முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக மீட்டருடன் கூடிய புதிய குடிநீர் குழாய் இணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தாந்தோணிமலை, ராயனூர் போன்ற பகுதிகளில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு தற்போது கரூர் நகரப்பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த பணிகளுக்காக வீடுகளின் முன்பும், குறுகிய தெருக்களிலும் பள்ளம் தோண்டி குழாய் இணைக்கப்பட்டு விட்டு அரைகுறையாக மூடப்பட்டு விடுகின்றன. இதனால் சாலையும் மோசமான நிலைக்கு செல்வதால் வாகன ஓட்டிகள் கடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். கரூர் நகரப்பகுதிகளான மேட்டுத்தெரு, மாவடியான் கோயில் தெரு போன்ற தெருக்கள் குறுகிய தெருக்களிலும் இதுபோல அரைகுறையாக பணிகள் நடைபெற்றுள்ளன. எனவே இந்த பகுதியில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரிவர மூட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Motorists ,
× RELATED வாய்க்கால்களை தூர் வாராததால் 100 ஏக்கர்...