×

பூ மார்க்கெட் செல்லும் குழந்தைவேல் சாலையில் தேங்கி கிடக்கும் கழிவு நீரால் சுகாதார கேடு

கரூர், டிச. 11: கரூர் பூ மார்க்கெட் செல்லும் குழந்தைவேல் சாலையின் அருகே நீண்ட காலமாக நிலவி வரும் கழிவு நீர் தேக்கத்தை குறைக்க நிரந்தர ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர் நகராட்சிக்குட்பட்ட ஆதி விநாயகர் கோயில் பகுதியில் இருந்து ரயில்வே நிலையம் மற்றும் பூ மார்க்கெட் செல்லும் சாலையோரம் குழந்தைவேல் சாலையை ஒட்டி பல்வேறு தெருக்களுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையோரத்தின் ஒரு பகுதி முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்னையாக சாக்கடை கழிவு நீர் தேங்கி நின்று பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தினால் பகுதியை சுற்றிலும் குடியிருப்பவர்களும், அருகில் வர்த்தக நிறுவனங்கள் நடத்தி வருபவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். தீர்க்கப்படாத பிரச்னையாக உள்ள இதனை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் பார்வையிட்டு மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : Flower Market ,
× RELATED கீழ்ப்பாக்கத்தில் ஆர்மேனியா தூதரகம்...