×

சாலையோரங்களில் சீத்தை முட்களுக்கு தீ வைத்து எரிப்பதால் சுற்றுச்சூழல் மாசு

கரூர், டிச. 11: சீத்தை முட்களுக்கு தீவைத்து எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சீத்தை முள் மரங்கள் அதிக அளவில் உள்ளது, இடையூறாக இருக்கும் சீத்தை மரங்களை சாலையோரம் அப்பகுதியினர் எரித்து விடுகின்றனர். சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பைகள் ஏற்கனவே எரிக்கப்படுகிறது. சீத்தை முட்களையும் எரிக்கின்றனர். இதனால் புகைமண்டலம் எழுகிறது. வாகனங்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். சீத்தை முட்கள் நிலத்தடி நீரையும் வேகமாக உறிஞ்சக்கூடியவை. எனவே இந்த சீத்தை முட்களை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags : burning ,
× RELATED காற்று மாசு காரணமாக டெல்லியிலிருந்து வெளியேறினார் சோனியா