வெண்ணைமலை முருகன் கோயிலில் படி பூஜை விழா பக்தர்கள் கிரிவலம் வந்து வழிபாடு

கரூர், டிச. 11: கரூர் வெண்ணைமலை முருகன் கோயிலில் படிபூஜை விழா நடைபெற்றது. கரூர் வெண்ணைமலை பாலசுப்பிரமணியசாமி கோயிலில் 45ம் ஆண்டு படிபூஜைவிழா நடைபெற்றது. காலை 8 மணிக்கு விநாயகர் அபிஷேகம், பின்னர் வேல் கிரிவலம் வந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். பின்னர் படி பூஜை நடைபெற்றது. ஒவ்வொரு படியிலும் வாழையிலையில் வெற்றிலை பாக்கு பழம் வைத்து, விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பாலசுப்பிரமணியசாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். அரங்கநாதன்பேட்டை பஜனைகுழு, ஹரிஹர பிரம்மானந்த பஜனை கோஷ்டியினர் பக்தி இசைபாடல்களை பாடினர். பின்னர் கிருத்திகை மண்டபத்தில் அன்னதானம் நடைபெற்றது.

Tags : Devotees ,Girivalam ,Veniyamalmai Murugan Temple ,
× RELATED திருவண்ணாமலையில் உண்ணாமுலையம்மன் அண்ணாமலையார் கிரிவலம்