ஓசூர் அருகே காரில் கடத்திய ₹10 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்

ஓசூர், டிச.11: ஓசூர் அருகே போலீசார் நடத்திய வாகன சோதனையில், காரில் கடத்திய ₹10 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் சிக்கியது.  இதை கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே கோவிந்தா அக்ரஹாரம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு, ஓசூர் சிப்காட் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மாநில எல்லையான பாகூரிலிருந்து வந்த ஒரு சொகுசு காரை மடக்கி, போலீசார் சோதனை மேற்கொண்டனர். அந்த காரில் ₹10 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் இருந்தன.  இதனையடுத்து காரில் இருந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு குட்கா பொருட்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, குட்கா கடத்தி வந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த ஜித்தேந்தர் (22), உக்காரம் (34) முக்தர் (30) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், ₹10 லட்சம் மதிப்பிலான குட்காவுடன் காரை பறிமுதல் செய்தனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Hosur ,
× RELATED திருவல்லிக்கேணியில் 3 அடுக்கு...