கண்காணிப்பாளரை கண்டித்து அஞ்சல் கோட்ட ஊழியர்கள் பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி, டிச.11: கிருஷ்ணகிரியில் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரை கண்டித்து, பேட்ஜ் அணிந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  கிருஷ்ணகிரி தலைமை அஞ்சலகம் எதிரில், அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் 3ம், 4ம் பிரிவு மற்றும் புறநிலை ஊழியர்கள் பிரிவு சார்பில், கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளரை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பி3 செயலர் செந்தில் தலைமை வகித்தார். பி 3 தலைவர் சிவசங்கரன், பொருளாளர் சத்தியபூங்குன்றன், பி 4 தலைவர் ராமமூர்த்தி, ஓசூர் கிளை தலைவர் பெரியண்ணன், பொருளாளள் ராஜா, ஓசூர் கிளை செயலாளர் செல்வம், பொருளாளர் கங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி 4 செயலர் மணி கண்டித்து பேசினார். இதில் ஜடிஎஸ் தலைவர் முருகேசன், செயலாளர் ரமேஷ், பொருளாளர் ரகு உள்ளிட்ட பலர் பங்கேற்று பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, கண்காணிப்பாளர் போனில் ஊழியர்களை மிரட்டி, அவர்களை மன உளைச்சலுக்கு உட்படுவதை கைவிட வேண்டும். எந்த அலுவலகத்திற்கு ஆய்வுக்கு சென்றாலும், சப் போஸ்ட் மாஸ்டர்களை திட்டுவதை கைவிட வேண்டும். போஸ்ட் மாஸ்டர் கண்ட்ரோலில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில், கண்காணிப்பாளர் தலையிடுவது போன்ற ஊழியர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி பேட்ஜ் அணிந்து, கோஷங்கள் எழுப்பினர்.

Tags : Superintendent ,
× RELATED அரசு ஊழியர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை...