கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி சாவு

பாப்பிரெட்டிப்பட்டி, டிச.11: பாப்பிரெட்டிப்பட்டி அருகே கோபாலபுரம் ஊராட்சி, நாராயணபுரம் பகுதியை சேர்ந்தவர் பெரியண்ணன்(37). கூலி தொழிலாளியான இவருக்கு கார்த்திகா என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை பெரியண்ணன், விவசாய கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்து வர சென்றுள்ளார். சென்றவர் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால், அவரது தம்பி பழனி அக்கம்,பக்கம் தேடியுள்ளார். நேற்று விவசாய கிணற்றுக்கு சென்று பார்த்த போது, பெரியண்ணன் சடலமாக கிடந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பழனி, பள்ளிபட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் அளித்தார். சம்பவ இடம் வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக, அரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : well ,
× RELATED மாயமான தொழிலாளி கிணற்றில் சடலமாக மீட்பு