ரஜினி பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ஓசூர், டிச.11: ஓசூரில் நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் விழா, ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு,  மாவட்டச் செயலாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் பாண்டியன் வரவேற்றார். சத்யநாராயணா ராவ், 70  கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகள் வழங்கினார். தொடர்ந்து 7 குழந்தைகளுக்கு தங்க மோதிரம், 20 பெண்களுக்கு தையல் மிஷின், 20 பேருக்கு பித்தளை சலவைபெட்டி, 70 பெண்களுக்கு இலவச சேலை, 300 பேருக்கு பொங்கல் பரிசாக வெல்லம், அரிசி, முந்திரி, திராட்சை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. 70 கிலோ கேக் வெட்டி பொதுமக்கள் அனைவருக்கும் வழங்கினார்.
இதில் கர்நாடக மாநில தலைவர் சந்திரகாந்த், மாவட்ட இணைச் செயலாளர் கார்த்திகேயன், துணைச் செயலாளர்கள் பாபாமாதையன், சலீம்பாஷ, வழக்கறிஞர் பிரிவு கோவிந்தராஜ், செயற்குழு உறுப்பினர்கள் முத்து, சாதிக் பாஷா, வர்த்தக அணி சரவணன், சம்பத், இளைஞரணி சுரேஷ், ஒன்றிய இணைச் செயலாளர் முருகன், சுதாகர், நகர துணைச் செயலாளர்கள் மணிகண்டன், திருவரங்கம், ராஜன் ராவ், சீனு, சத்யா, மணி, அசோக், பிரேம்குமார், வெங்கடேசன், ரமேஷ், மஞ்சு, பாஸ்கர், விஜயகுமாரி, அருண், ரமேஷ்வரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஒன்றிய செயலாளர் மஞ்சுநாத்ராவ் நன்றி கூறினார்.


Tags : Rajini ,birthday ,
× RELATED நலத்திட்ட உதவி வழங்கல்