×

மூங்கம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள தண்ணீர்

போச்சம்பள்ளி, டிச.11: மூங்கம்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை தண்ணீர் சூழ்ந்துள்ளதால், குழந்தைகளை படிக்க அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. போச்சம்பள்ளி அருகே மூங்கம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.  இதில் குழந்தைகளுக்காக குடியிருப்பு வீட்டில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. ஆனால், போதிய அடிப்படை வசதியில்லாததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை  மையத்திற்கு அனுப்பாமல் இருந்தனர். இதை தொடர்ந்து, மூங்கம்பட்டி கிராமத்தில் ஊராட்சி வளர்ச்சி திட்டத்தின் மூலம் ₹6.50 லட்சம் மதிப்பில் 2014-2015ல் புதியதாக அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது. இந்நிலையில் கடந்த வாரம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதால் மழை நீர் அங்கன்வாடி மைய கட்டிடத்தை சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் அங்கன்வாடிக்குள் யாரும் செல்ல முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கி உள்ளது. குழந்தைகளை மையத்திற்குள் அழைத்து செல்ல வேண்டும் என்றால் படகு மூலம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, அங்கன்வாடி மையத்தை சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : center ,Anganwadi ,Moongampatti ,village ,
× RELATED டிடிவி.தினகரன் ட்விட் கங்கை நீர் எது? சாக்கடை நீர் எது?