×

வேப்பனஹள்ளி ஒன்றியத்தில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்

வேப்பனஹள்ளி, டிச.11: வேப்பனஹள்ளி வட்டார சுகாதாரத் துறை மூலமாக, பள்ளி மற்றும் தொழிற்சாலைகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டன. வேப்பனஹள்ளி அருகே எகுடதம்பள்ளி நடுநிலைப்பள்ளி மற்றும் தனியார் தொழிற்சாலையில், டெங்கு விழிப்புணர்வு கூட்டங்கள் நேற்று நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், கழிவுநீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவது, காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற வேண்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், வட்டார மருத்துவ அலுவலர் சரவணன், பள்ளி தலைமை ஆசிரியர் முஜீர்பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாணவ, மாணவிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Tags : Dengue Fever Awareness Camp ,Veppanahalli Union ,
× RELATED டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்