×

ஆர்ப்பாட்டம்

பாலக்கோடு, டிச.11: பாலக்கோடு பேருந்து நிலையத்தில், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து, தர்மபுரி மாவட்ட, சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜாவித் தலைமை வகித்தார். இதில், குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றக் கூடாது என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், நகர தலைவர் முன்னா, செயலாளர் சாதிக்பாஷா ஆகியோர் கலந்து கொண்டனர். இதையடுத்து அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதால், 30க்கும் மேற்பட்டவர்களை, பாலக்ேகாடு போலீசார் கைது செய்து, தனியார் மண்டபத்தில் அடைத்து, பின்னர் விடுதலை செய்தனர்.

Tags : Demonstration ,
× RELATED நகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்